‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு மனநோயாளி.. சட்டவிரோத கந்துவட்டிக்கார்ர்களுக்கு ஆதரவு அளிப்பவர், தேசவிரோத சக்திகளிடம் பணம் பெறுவபவர்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்தருக்கிறார்.

திரைத்துரையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் கடந்த (நவம்பர்) 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.  திரைத்துறையினருக்கு வட்டிக்கு பணம் தரும் ஃபைனான்சியர் அன்புச் செழியன்  மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.  இதையடுத்து அன்புச் செழியன் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இந்த நிலையில் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

சீமான்

இந்த நிலையில் அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விசால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

அதே நேரம் நடிகை தேவயானி, இயக்குநர் சுந்தர் சி போன்ற சிலர் அன்புச்செழியன் நல்லவர் என்று பேட்டிகள் அளித்தனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திரைத்துறையில் கந்துவட்டி என்பதே கிடையாது. மார்வாடிகள் பணம் கொடுத்தால் பைனான்ஸ்… தமிழன் கொடுத்தால் கந்துவட்டியா” என்று அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“கந்தவட்டி கொடுமை காரணமாக, திரைத்துறையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிந்து காவல்துறை தேடி வருகிறது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சிலர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழத்தின் மூன்று முக்கிய பிரச்சினைகள்,..  கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் ஆகியவை.

தமிழகத்தில் இன்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் பிணக்குகளும்  சாதிய மோதல்களும் நீடித்திருக்கக் காரணம் இந்த கந்துவட்டிக்கும்பலும் கட்டப்பஞ்சாயத்துக் கும்பலும்தான். அவர்கள்தான் சதியக் கொம்பை கூர்மைப்படுத்திதக்கொண்டிருப்பவர்கள்.

திரைத்துறையினருக்கு பணம் கொடுக்கும் இந்த கந்துவட்டிக்கும்பல், திரைப்பட உருவாக்கத்திலும் தலையிடுகிறது.   சாதி வெறியைத் தூண்டும்படியான காட்சிகளை எடுக்க வைக்கிறது.  இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப்பிடிப்பதாக இருக்கிறது. இப்படி செய்து தங்கள் சாதிக்கு ஆதரவாக ஆள் சேர்க்கிறது கந்துவட்டிக்கும்பல்.

இது போன்ற படங்கள்தான் தமிழர்களை பிளவுபடுத்தியது, தமிழர்களிடையே மோதலை உருவாக்கியது. தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைத்தது.

கந்துவட்டியை குப்பன் செய்தால் என்ன சுப்பன்  செய்தால் என்ன…  யார் செய்தாலும்  அது சமூக குற்றம்.

டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழன் கற்பழித்தால் சரியானது, மலையாளி செய்தால் தவறு..

தமிழன் கள்ளக்கடத்தல் செய்தால் சரியானது..  ஆந்திராக்காரன் செய்தால் தவறு.. என்பவர்கள்  மனநலம் குன்றியவர்களாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பித்துப்பிடித்தவர்களாக இருக்க வேண்டும்.

தன்னை தமிழனத்தடைய அடையாளமாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திக்கொள்ளும் சீமான்..  வெளிநாட்டில் வாழுகின்ற.. இந்திய தேசத்துக்கு எதிராக செயல்படக்கூடிய அமைப்புகளில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் பெறுகிறார். இப்படிப்பட்டவர், இப்போது கந்துவட்டிக் கொடுமையை கண்டிக்காமல், கந்துவட்டிக்கார்களை ஆதரிக்கிறார்.

கணக்கு வழக்கு இல்லாமல்,  எந்தவித சட்டதிட்டத்துக்கும் உட்படாமல் பத்து இருபது நூறு கோடி என எப்படி இந்த கந்துவட்டிக்காரர்களால் கடன் கொடுக்க முடிகிறது?

20 ஆயிரம் ரூபாய் வங்கியில் எடுக்கும்போதுகூட பேன் கார்டு எண்ணை அளிக்க வேண்டியிருக்கிறது.  எந்தவித பண பரிவர்த்தனையும் சட்ட முறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்கிறது அரசு.

இந்த நிலையில் சட்ட விரோதமாக அன்பு செழியன் என்ற நபர் எப்படி கோடிக்கணக்கான ரூபாய் பண பரிவர்த்தை செய்கிறார்.

இந்த நபரை, தன்னை தமிழகத்தின் அடையாளரமாக காண்பித்துக்கொள்ளும் சீமான் ஆதரிக்கிறார்.

சீமான் வெளி வேசம் போடுகிறார்… தமிழர்களை ஏமாற்றுகிறார்.. இளைஞர்களை ஏமாற்றுகிறார் என்று பல காலமாகவே சொல்லி வருகிறேன். கந்துவடிட்டி, கட்டப்பஞ்சாயத்து கள்ளக்கடத்தல் பேர்வழிகளுக்கு ஆதரவு கொடுப்பதே அவர் நோக்கம்.

சீமானின் வேசம், அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்த்தில் இருந்து அம்பலப்பட்டுவிட்டது.

திரைத்துரையில் இன்னும் சிலர் வெளிப்படையாக அன்புச் செழியனை பாராட்டுகிறார்கள்.  பணம் கேட்டேன்.. கொடுத்தார் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்.  இதன் மூலம், திரைப்படத் துறைக்கும் கந்தவட்டிக்கும் நேரடியான தொடர்பு இருப்பது அம்பலமாகிவிட்டது.

மத்திய வருவாய்த்தறை உளவுத்துறை உள்ளிட்டவை தீவிரமாக களத்தில் இறங்கி இது குறித்து ஆராய வேண்டும்.. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று அந்த வீடியோவில் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.

[embedyt] https://www.youtube.com/watch?v=PApMrMUjslE[/embedyt]