சென்னை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவிரி விவகாரத்தில் காங்கிரஸையும் பாஜகவையும் குறை கூறி உள்ளார்.

இன்று சென்னையில் தமிழகத்து உரியக் காவிரி நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.  ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுப் பேசினார்.

சீமான் தனது உரையில்,

”காங்கிரசும், பாஜகவும் காவிரி விவகாரத்தில் மாநிலக் கட்சிகளாகச் செயல்படுகின்றன. கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு உண்மையாக இருக்க நினைக்கிறார்கள்.

கன்னட நடிகர் காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாகப் போராடினால் அவர்களுக்குத் தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்காது”.

என்று பேசி உள்ளார்.