சென்னை

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது ஆண்டு வருமானம் ரூ.1000 என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முக்கிய தலைவர்கள் பலர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இவர்களுடைய சொத்து விவரங்கள் தெரிய வந்துள்ளன.

நா த க தலைவர் சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 எனவும் அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர் மனைவிக்கு அசையும் சொத்து ரூ.63,25,031 மற்றும் அசையா சொத்து ரூ.25,30,000 உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  அதுமட்டுமின்றி சென்ற 2019-20 ஆம் ஆண்டில் தம்,அது ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.,