தடைசெய்யப்பட்ட பான், குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்குச் சீல் -சென்னை மாநகராட்சி அதிரடி

Must read

சென்னை: 
டைசெய்யப்பட்ட பான், குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்குச் சீல்  வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற பொருட்களைக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் எச்சரிக்கையை மீறி பல கடைகளில் பான் குட்கா விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிக்குப் புகார் வந்தது.  இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுகிறதா எனச் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 100 கடைகளில் பான் குட்கா விற்பனை செய்யபப்ட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது
 மேலும் பான், குட்கா போன்ற போதை பொருட்கள் 11 டன்கள் பறிமுதல் செய்ததாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article