சென்னை: தமிழ்நாட்டிகள் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், முதல்கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதையடுத்து, பள்ளிகளை திறக்க தனியார் பள்ளி நிர்வாகிகளும், பெரும்பாலான ஆசிரிய பெருமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஸ்டாலின் அரசு, அமைச்சர் மற்றும் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் என பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
,இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். இது குறித்த அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என பள்ளிக் கல்வித் துறை பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.