புதுச்சேரியில் டிசம்பர் 6 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறப்பு

Must read

புதுச்சேரி

ரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன

நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டன.    அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு நடத்தாமலே அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர்.   ஒரு சில மாவட்டங்களில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு இடையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.   புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.

முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்த போது  மழை வெள்ளம் ஏற்பட்டது.  இதையொட்டி பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புக்கள் வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

More articles

Latest article