சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாக  போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் சுமார் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கல்லூரிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் கொரோனா வழிகாட்டுதலுடன் திறக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 1ந்தேதி முதல்  1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்கள், பழைய பஸ் பாசை காட்டி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.  பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள்,  பள்ளி அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.