சென்னை: மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற பாடங்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை 47ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மார்ச் 13ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டு இருக்கின்றன.
முதல்நாளான 13ந்தேதி தமிழ்‘ முதல்தாள் தேர்வு நடைபெற்றது. முதல்நாள் தேர்வையே 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பாடத் தேர்வுகளையும், 47ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
12ம் வகுப்புக்கு இதுவரை தமிழ்,ஆங்கில பாடத்தேர்வுகள் மட்டமே நடைபெற்றுள்ளன. தொடர்ந்து இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், நேற்றைய தேர்வை 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவ்வாறு சேரும் மாணாக்கர்களுக்கு உரிய விதத்தில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறதா, மாணாக்கர்கள் ஒழுங்காக பள்ளிகளுக்கு வருகிறார்களா என்பதை பள்ளிக்கல்வித்துறை கவனிக்க மறந்துவிட்டது. இதனால், அரசு வழங்கும் சலுகைகளை பெறவே மாணாக்கர்கள் பள்ளிகளுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் படிப்பதை தட்டிக்கேட்க முடியாத அவல நிலையில் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையில், மாணாக்கர்களுக்கு ஆட்டம் பாட்டம், விளையாட்டு என பல பல்வேறு திறமைகளை வளர்ப்பதாக கூறி அவ்வப்போது நிகழ்ச்சிகளை கல்வித்துறை முன்னெடுத்து, அதை பிரபலப்படுத்தி வருகிறது. இதனால் பல மாணாக்கர்கள், அதுபோன்ற கேளிக்கைகளிலும், விளையாட்டுக்களிலும் ஆர்வம் கொள்வதால், மாணாக்கர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சியில் தொடர்கதையாகும் தாக்குதல்கள்! ஆசிரியர்கள் கொந்தளிப்பு… வீடியோ