திண்டுக்கல்: குடிநீர் வடிகால் வாரியே நீரேற்று நிலையத்தில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த   12 சிலைகளை மீட்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமானதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி  பகுதியில் பிரபலமான சிவன் கோயில் உள்ளது.  இந்த நிலையில், அந்த பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தின் உள்ளே 12 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த சிலைகளை  பறிமுதல் செய்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சிலைகளை திருடிக்கொண்டு வந்து, நீரேற்று நிலையத்திற்குள்வைத்தது யார்? இதில் கோவில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற அடிப்படையில்  போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சிவன் கோவிலில் எந்தவொரு சிலையும் திருடுபோகவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து,  பறிமுதல்  செய்யப்பட்ட, சிலைகளை நிலக்கோட்டை வட்டாட்சியரிம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இந்த சிலைகளை குறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட தகவலில் சிலைகள் அனைத்தும் சிமெண்டால் செய்யப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.