டில்லி

மர்நாத் பக்தர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்துக்களின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அமர்நாத் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது.    ஸ்ரீநகரில் இருந்து 141 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த குகைக் கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக பனி லிங்கம் உருவாகும்.   இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகிறார்கள்.

அமர்நாத் கோவிலை பாதுகாக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.    அதை ஒட்டி தேசிய பசுமை தீர்ப்பாயம் பனிலிங்கம் முன்பு அமைதி காக்க வேண்டும்  என்பது உட்பட ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.    கடந்த ஆண்டு வெளியான இந்த உத்தரவினால் நாடு முழுவதும் கடும் சர்ச்சை கிளம்பியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த கட்டுப்பாடுகளை எதிரித்து உச்ச நீதிமன்றத்தில் வழகு தொடரப்பட்டது,   இந்த வழக்கை நீதிபதிகள் லோகுர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.    இந்த அமர்வு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமர்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது