Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கல்லூரி இறுதியாண்டு தேர்வை எதிர்த்து மாணவர்கள் வழக்கு! யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Jul 27, 2020

டெல்லி:

கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என வெளியான அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து யுஜிசி பதில் அளிக்க  உத்தரவிட்டு வழக்கை வரும் 31ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து,  அதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை 6 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் நடத்தும் சாத்தியம் இல்லாததால், பள்ளி தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
ஆனால், கல்லூரிஇறுதியாண்டு இறுதித்தேர்வு எழுத வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மனுவில்,  யு.ஜி.சி வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக இருப்பதா கவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப் படுத்துவது சரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள்  அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, மனு தொடர்பாக பதில் மனுதாக்கல் யுஜிசிக்கு   நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 31ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post navigation

ஆகஸ்டு 5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும்… அமைச்சர் காமராஜ்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer