சென்னை:
மிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து,  ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க  தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள்மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முக்கவசம் வழங்கப்பட உள்ளது. இந்த  திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்கட்டகமாக 5 நபர்களுக்கு வழங்கி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அதன்படி,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட, மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முகக்கவசங்கள் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டம் ஆகஸ்டு 5ந்தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது. அன்று முதல் ரேசன் கடைகளில்,  இலவச முகக்கவசம் வழங்கப்படும்  என்றவர், முன்னதாக, ரேசன் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில்,  ஆகஸ்டு, 1,3,4 ஆகிய தேதிகளில் வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.