டில்லி

நீண்டகாலமாக விசாரணையில் உள்ள வழக்குகளை முடிப்பது குறித்து சிபிஐ மற்றும் சிவிசிக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உளது.

மாநில அரசுகளால் விசாரிக்க முடியாத மற்றும்  சரியாக விசாரணை நடைபெறாது என பல வழக்குகள் கருதப்படுகின்றன.   இந்த வழக்குகள் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ மற்றும் மத்திய புலனாய்வு ஆணையமான சிவிசி ஆகிய அமைப்புக்களுக்க் மாற்றபடுகின்றன.

அது மட்டுமின்றி மத்திய அரசின் நிதித்துறை பல பொருளாதார குற்றங்களை சிபிஐ விசாரணைக்கு அனுப்பி வைக்கிறது.   பல அரசியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் சிவிசி க்கு அனுப்பப் படுகின்றன.    இது போல அனுப்பப்படும் பல வழக்குகள் நீண்ட காலமாக் விசாரணையில் உள்ளன.

இது குறித்து மனீஷ் பதக் என்னும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்   அந்த மனுவில், “சிபிஐ மற்றும் சிவிசி பல வழக்குகளில் நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகின்றன.  இதனால் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க இயலாத நிலை உள்ளது.   இது போல பல வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், “இது மிகவும் முக்கியமான விவகாரமாகும்.   எனவே இந்த தாமதத்தை நீக்க சிபிஐ மற்றும் சிவிசி எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நோட்டிஸ் அனுப்ப உள்ளோம்.   அத்துடன் எந்த ஒரு வழக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தக் கூடாது என சிபிஐக்கு நீதிமன்றம் வலியுறுத்த உள்ளது” என தெரிவித்துள்ளது.