டில்லி:

கவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.5 என்றும் அதிக பட்சமாக  ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் கீழ் வரும்  அனைத்து நீதிமன்றங்கள், உயர்நீதி மன்றங்கள், அனைத்து நிறுவனங்கள், சட்டமன்றங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறி உள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் படி விவரம் கேட்க அதிக அளவு பணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவத்து பல்வேறு மாநில உயர்நீதி மன்றங்களில் வழங்கு தொடரப்பட்டுள்ளது.

2011 ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில சட்டசபை ஆர்டிஐ குறித்த தகவ்ல பெற கட்டணமாக  ரூ. 500 ஆக உயர்த்தியது. பின்னர் எதிர்ப்பு காரணமாக  2016 டிசம்பரில் 300 ரூபாய்க்கு அது குறைக்கப்பட்டது. இதை எதிர்த்தும்  சந்தீஷ்கர் மாநில அரசுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பிரபல வழக்கறிஞர் பிரசாஷ்த் பூஷன் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆர்டிஐ தொடர்பான வழக்கில், இது அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவது பொது மக்களுக்கு  அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது.

மத்திய அரசின் விதிகளின் கீழ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற விண்ணப்பம் செய்யும் கட்டணம் ரூ. 10  என்றும், அதற்கான ஆவனங்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் நீதிபதி உதய் உமேஷ் லலித் ஆகியோர் இந்த அதிரடி  உத்தவை பிறப்பித்துள்ளனர்.