டெல்லி: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை. அதை அமைச்சர் எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கினை  தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 1996 -2001 கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தமிழக அமைச்சரவையில் தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.பொன்முடி.  இவர் 1996-2001 காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது  அதிமுக ஆட்சியின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி, அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

நீதிபதியின் இந்த உத்தரவு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டிய லஞ்ச ஒழிப்புதுறை தற்போது, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பொன்மீதான வழக்கை,  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். மறுஆய்வுக்கு எடுத்து விசாரிக்கப்போவதாக கூறியதுடன், மாவட்ட நீதிமன்றத்தில்  விசாரணை மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். ​

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்  இவ்வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலக வேண்டும் என்று பொன்முடி தரப்பு கோரிக்கை வைத்தது. மேலும் வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையும் நீதிபதி வெங்கடேஷ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தது. ஆனால், , அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், லஞ்ச ஒழிப்புதுறை ஆட்சியாளர்களுக்கு எற்ப பச்சோந்தி போல மாறுகிறது என கடுமையாக விமர்சனம் செய்ததுடன், இந்த  தானே இவ்வழக்கை விசாரிக்கப் போவதாக கறார் காட்டினார்.

இந்தநிலையில், திடீரென நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டதால் இவ்வழக்கை தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார். ​

இந்த பரபரப்புக்கு மத்தியில், பொன்முடி தரப்பில், தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்தது தவறு என கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார்.  பொன்முடியை விடுவித்தநீதிபதி சார்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாஜக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொன்முடி மீதான வழக்கை உச்சநீதிமன்ற   தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது ஏற்புடையது அல்ல. முடித்துவைக்கப்பட்ட வழக்கை ஏன் மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றியது ஏன்? அதற்கான அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்கில்,.  நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால் உயர் நீதிமன்றம் தலையிட்டு தாமாக மறு ஆய்வு செய்வதாகவும் அதனை எவ்வாறு மறுக்க முடியும் என்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை மறுஆய்வுக்கு எடுத்தது சரிதான், ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும் எனவும் அதிரடியாக கருத்து கூறினர்.

மனுதாரர்கள்  வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள்  தங்களுக்கு உள்ள அனைத்து வாதங்களையும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது வைக்கலாம் என்றும் கூறி பொன்முடி கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால் வழக்கு விரைவில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.