டெல்லி: சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை, நிரந்தர நீதிபதியாக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்ப பெறப்பட்டு உள்ளது.

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில், புஷ்பா கனேடிவாலா நீதிபதியாக பணியாற்றி வருகிறார். போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட  வழக்கை விசாரித்த அவர், உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும் என்று தீர்ப்பளித்தார். அவரது இந்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் ஜனவரி 20ம் தேதி, நீதிபதி புஷ்பாவை, மும்பை உயர்நீதி மன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, ரோஹன்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது.

புஷ்பாவின் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் எதிரொலியாக அவரை நிரந்தர நீதிபதியாக்கும் முடிவை திரும்ப பெற உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.