டில்லி

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் கவனாமாக பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி குறிப்பிட்டது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவருடைய பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

உச்சநிதிமன்றத்தில் தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும்  உதயநிதியின் பேச்சு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும், மற்றபடி வழக்கின் விசாரணைக்கு தடை கோர வில்லை என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறும் போது, “அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர். விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது., ரிட் மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.