அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சுமார் 1,700 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளையும் முடக்கி உள்ளது.

இந்த ஆண்டுக்கான வருமான வரி ரூ. 134 கோடி செலுத்தப்பட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளில் ரூ. 1700 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ள காங்கிரஸ் கட்சி 2014-15, 2015-16, 2016-17 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21.ம் ஆண்டுகளுக்கான வருமான வரித் துறைகளுக்கு எதிரான மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஜூன் மாதம் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் வரை இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று உறுதிமொழி அளித்துள்ளது.