வர்த்தக செய்திகள் : ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீடு 5% விலை உயர்வு

ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீடு நிறுவன பங்குகள் முதல் நாளிலேயே 5% விலை உயர்ந்துள்ளது.

எஸ் பி ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம்,  பாரத ஸ்டேட் வங்கியும் ஃபிரான்ஸ் நாட்டின் பிஎன்பி பரிபாஸ் கார்டிஃப் என்னும் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும்.

நேற்று வெளியிடப்பட்ட எஸ் பி ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகளின் விலை ரூ.700 என அறிவிக்கப்பட்டிருந்தது.  முதல் நாளான நேற்று இந்த பங்குகளின் அதிகபட்ச விலை ரூ.740 ஆகவும் குறைந்தபட்ச விலை ரூ.735 ஆகவும் இருந்தது.  சராசரி உயர்வாக 4.29% விலை உயர்வை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
SBI Life insurance stacks price increased by 5%