ன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் பின் வருமாறு.

1.    எபிக் சிஸ்டம்ஸ் என்னும் அமெரிக்க கம்பெனியின் வியாபார ரகசியங்கள், அந்தரங்க செய்திகள், டாகுமெண்டுகள் மற்றும் டேட்டாவை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட டி சி எஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் $420 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.  இது குறித்து மேல் முறையீடு செய்யப்போவதாக டி சி எஸ் அறிவித்துள்ளது.

2.   ஐடியா – வோடஃபோன் வரும் மார்ச் மாதம் இணைகின்றன.  இது பற்றி அதிகாரபூர்வமான தகவல்கள் இதுவரை வராத போதிலும் வரும் மார்ச் மாதத்துக்குள் சட்டபூர்வ அனுமதி கிடைத்துவிடும் என ஒரு அதிகாரி கூறி உள்ளார்.

3.   ஃபிட்ச் ரேட்டிங்க் எனப்படும் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.45% லிருந்து 6.9% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  இதற்கு பணமதிப்பு குறைப்பு மற்றும் ஜி எஸ் டி அமுலாக்கமே காரணம் என கூறி உள்ளது.

4.   டாக்டர் ரெட்டி லபாரடரீஸ் தனது சிறுநீரக மருந்து விலையை 4% உயர்த்தியுள்ளது.  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனிவலா ஜெனரிக் 800மிகி மருந்துக்கு அமெரிக்க சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளதால் இந்த விலை உயர்வு என தெரிய வருகிறது.

5.   ஆசியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இம்ப்ரூவ்மெண்ட் வங்கி மற்றும் ஆசிய டெவலப்மெண்ட் வங்கி ஆகிய இருவங்கிகளும் இணைந்து இந்தியாவின் மின்சார திட்டங்களுக்கு $150 மில்லியன் கடன் உதவி வழங்க உள்ளது.  இந்தப் பணம் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை மேம்படுத்த வழங்க உள்ளது.  ஆசிய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வங்கியில் அதிக பங்குகளை வைத்திருக்கும் நாடுகளில் முதலில் சீனாவும், இரண்டாவதாக இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

6.   ஏர்செல் – ரிலையன்ஸ் இணைப்பு கைவிடப்பட்டது.  ரிலையன்ஸ் தனது நிறுவனப் பங்குகளை கடன் கொடுத்தோருக்கு அளித்து தனக்கு உள்ள கடனை தீர்க்க திட்டமிட்டுள்ளது.

7.   பொருளாதார வளர்ச்சிக் குறைவை சமாளிக்க ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும் என தெரிய வந்துள்ளது. பண வீக்கம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை என சொல்லப்படுகிறது.