போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.
இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. முதலில் ‘பிசாசு’ படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார். ஆனால், தேதிகள் பிரச்சினைகள் காரணமாக சயிஷா சைகல் ஒப்பந்தமானார்.
இந்நிலையில், தற்போது சயிஷா சைகலும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரக்யா ஜெய்ஷ்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கவுள்ளார். துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.