மும்பை

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவராக முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலியும் செயலராக அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பிசிசி ஐ  என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் செயலர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.  இது தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது.  இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவர் என் ஸ்ரீனிவாசன், முன்னாள்  செயலர் நிரஞ்சன் ஷா மற்றும் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஜெய் ஷா

அந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு  முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேலை என் ஸ்ரீனிவாசனும், சவுரவ் கங்குலி பெயரை அனுராக் தாக்குரும் பரிந்துரை செய்தனர்.  கூட்டத்தில் நடந்த விவாதத்தில் சவுரவ் கங்குலி  தலைவராகவும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலையும் தேர்வு செய்ய முடிவு எடுகபட்டது.    அத்துடன் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும்.  தற்போது தேர்வானவர்களை எதிர்த்து யாரும்  போட்டியிடப் போவதில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனவே  இன்று  இவர்களைத் தேர்வு செய்து வரும் 23 ஆம் தேதிக்குப் பிறகு அதிகார்பூர்வமான அறிவிப்பு வர உள்ளது.