பல மாதங்களாக சவுதியில் சம்பளமின்றி பரிதவிக்கும் இந்தியர்கள்!

Must read

சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணியாளார்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் அந்நாட்டு அரசு அலட்சியம் காட்டி வருவதால் அத்தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாகி உள்ளது.
1saudi-workers
சவுதியில் உள்ள இந்திய தொழிலாளர்களின்  பிரச்சனையை தீர்க்க இந்திய அரசு தூதரகம் மூலம் செய்துவரும் முயற்சிகள் பலனளிக்கததால் இந்தியத் தொழிலாளர்கள் சம்பள பாக்கியை எதிர்பார்க்காமல் இந்தியா வந்து சேருமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.  அவர்களது பயணச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சவுதி மன்னர் தமது சொகுசு மாளிகையைவிட்டு 1000 பணியாளர்களுடன் மொராக்கோ நாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்று தெரிகிறது.
இதற்கிடையே எண்ணை விலையின் கடும் வீழ்ச்சியால் ஏற்பட்ட நஷ்டமே சம்பள பாக்கிக்கான காரணம் என்று சவுதி அதிகாரிகள் காரணம் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நிலை மோசமாக இருப்பதாக சவுதி அரசு ஒருபக்கம் பஞ்சப்பாட்டு பாடினாலும் இன்னொரு பக்கம் அது ஏமனில் நடைபெறும் உள்நாட்டுக் கலவரத்துக்கு கோடிக்கணக்கில் நிதி உதவி செய்வது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்ததற்கான கூலியைப் பெறாமல் சவுதியை விட்டு வெளியேறுவதில்லை என்று விடாப்பிடியாக இந்தியத்தொழிலாளர்கள் அங்கு  காத்திருக்கும் வேளையில் அவர்களுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் வழங்கி இந்திய தூதரகம் அவர்ளுக்கு உதவி வருகிறது.

More articles

Latest article