கத்தார்: ஒலிம்பிக் ஹேண்ட்பால் விளையாட்டிற்கான ஆசியப் பிரிவு அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில், இந்திய அணி சவூதி அரேபியாவிடம் தோற்றுப்போனது.

35-24 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சவூதி அரேபிய அணி.

2020ம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகளை தேர்வுசெய்வதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

பல விளையாட்டுகளிலும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆசிய அணிகளுக்கான ஹேண்ட்பால் தகுதிச் சுற்றுப் போட்டி நடந்து வருகிறது. இதில், லீக் போட்டி ஒன்றில் இந்தியா – சபூதி அணிகள் மோதின.

இப்போட்டியின் முதல் பாதியில் 13-19 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்த இந்தியா, அடுத்தப் பாதியில் 11-16 என்ற புள்ளிக் கணக்கில் மேலும் சரிந்தது. முடிவில், 24-35 என்ற புள்ளிகளின்படி தோல்வியடைந்தது.