பீஜிங்: சீனாவில் நடைபெற்றுவரும் ஆண்கள் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தின் குன்னேஸ்வரன் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் தமிழ்நாட்டின் குன்னேஸ்வரன், சீன தைபேவின் டிசங் ஹூவாயங்கை எதிர்கொண்டார்.

இப்போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக சென்றது. முதல் சுற்று டை பிரேக்கர் வரை நீடித்தது. ஆனால் குன்னேஸ்வரன் விடவில்லை. இந்தச் சுற்றை 7-6 என்று கைப்பற்றினார்.

பின்னர் இரண்டாவது சுற்றிலும் அசராமல் ஆடினார். அவர் அந்தச் சுற்றை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, போட்டியை வென்று காலிறுதிக்குள் சென்றார்.

பெரியளவிலான ஊக்குவிப்பும் வசதி வாய்ப்புகளும் இல்லாமல் பயிற்சிசெய்து முன்னேறிய ஒரு தமிழக வீரர், சீனா போன்ற ஒரு நாட்டின் வீரரை வெல்வது கவனிக்கத்தக்கது.