ரியாத்,

வுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து சவுதி அரேபியாவும் முஸ்லிம் பயங்கரவாதம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் ஈராக் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடைவிதித்தார். அது பலத்தை சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் ஒரு முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவும் பாகிஸ்தானியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அடுத்த 4 மாதங்களில் 39 ஆயிரம் பாகிஸ்தானியரை வெளியேற்ற சவுதி அரசு முடிவுசெய்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திகுறிப்பில், 82 பாகிஸ்தானியர்கள் தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதனால் பாகிஸ்தானிலிருந்து சவுதி வருவோரை தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர்களது பின்னணி குறித்து அனைத்துத் தகவல்களையும் சேகரிக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஈழத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளிநாட்டினர் குறித்தும், அவர்கள் பெறும் ஊதியம் பற்றியும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.