வரெஸ்ட் சிகரத்தில் அடிக்கடி நிகழும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுக்க இலவச வைஃபை சேவை மையங்கள் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நேபாள நாட்டு தொலைதொடர்புத் துறை இயக்குநர் திகம்பர ஜா இதனைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், லுக்லா- இபிசி மற்றும் அன்னபூர்ணா பகுதிகளில் முதற்கட்டமாக ஆய்வு அடிப்படையில் இலவச
வைபை சேவையை தொடங்கவிருப்பதாக கூறினார்.

இதனால் நிலநடுக்கம், பனிச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும் என்றார்.

இதனால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

அடுத்தக்கட்டமாக மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி இழைகளில் அதிவேக இணைய சேவை அமைக்கப்படுவதாக திகம்பர் ஜா கூறினார்.