நகைச்சுவை நடிகர் சதீஷுக்கும், சிக்சர் படத்தின் இயக்குநரான சாச்சியின் சகோதரி சிந்துவுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

சதீஷ் தனது திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தார். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.