சாத்தான்குளம் சம்பவம்: 3 போலீசார் சிபிஐ காவலுக்கு அனுமதி..

Must read

மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,  3 போலீசாருக்கு சிபிஐ காவல் விசாரணைக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஏற்கனவே , இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேரை 3 நாள்  காவலில்  எடுத்து விசாரணை நடத்தியது.
அதைத்தொடர்ந்து மேலும் மேலும் 3 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்தது.  அதன்படி, காவலர்கள் வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க  அனுமதிக்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து,  3  காவலர்களை ஆஜர்படுத்த நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
இதனையடுத்து இன்று 3 காவலர்களும், இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து,  3 காவலர்களுக்கும் வரும்  23ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க  அனுமதி வழங்கி உள்ளது.

More articles

Latest article