இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காவல்துறையினருடன் கைகோர்த்து தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

அவ்வாறு மதுரை காவல்துறையினருடன் இணைந்து சசிகுமார் தன்னார்வலராக பணிபுரிந்து இருக்கிறார். அவருடைய பணிகள் மற்றும் வேண்டுகோள் அனைத்தையும் இணைத்து மதுரை காவல்துறையினர் ஒரு விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

வீடியோவின் இறுதியில் சசிகுமார் பேசும் போது, “காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். காவல்துறையினர் சொல்லியிருப்பது போல் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள், வீட்டிலேயே இருங்கள். அந்தத் தெருவை மூடியிருந்தால், அதற்குள்ளேயே இருங்கள். அதெல்லாம் நமது நல்லதுக்குத் தான் சொல்கிறார்கள். நம்மைப் பாதுகாக்கும் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் சல்யூட்!” என்று பேசியுள்ளார்.