நெல்லை,
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்து உதைத்ததை தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அவரை எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தியதாகவும், தான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் பாராளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுது பரபரப்பை ஏற்படுத்தினார்.
sasi-har
அதையடுத்து, தன்னை கைது செய்துவிடுவார்கள் என எண்ணி, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் பெற்று தற்போது ஜாமினில் உள்ளார்.
சசிகலா மற்றும் அவரது மகன், கணவர் மீது, அவர்வீட்டில் வேலை செய்துவரும் பெண்கள் கொடுத்த பாலியல் புகாரில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என எண்ணி மதுரை ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனுவில் அவரது கையெழுத்து போலியான என நிருபணமானதால், நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரையில் ஆஜராக வந்த சசிகலாவுக்கு, அவரது உறவினரும், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் பாதுகாப்பு வழங்கி வந்தார். இதன் காரணமாக அரசு, ஹரி நாடார் மீது கோபத்துடன் இருந்து வந்தது.
இந்நிலையில், சசிகலாபுஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த பெண்களின் சார்பாக வாதாடி வரும் திசையன் விளையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் வீட்டை தாக்கியதாக நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரியை போலீஸார் அக்டோபர் 16-ம் தேதி திருநெல்வேலியில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது,  ஹரிநாடார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவரை நெல்லை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை.