சென்னை:
சிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர  ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் தாக்கிய விவகாரம் காரணமாக சசிகலா எம்.பியை அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விசாரித்து, அவரது கன்னத்தில் அடித்தாக சசிகலா எம்.பி மாநிலங்களைவியில் புகார் கூறினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
stalin
இதுகுறித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்  ஸ்டாலின்:
கேள்வி: அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா தன்னை முதல்வர் ஜெயலலிதா தாக்கியதாகவும், எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு, எனவே தனக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?
பதில்: தனக்கு பாதுகாப்பு இல்லை என சொன்னது அதிமுகவின் எம்.பி., அதை சொன்ன இடம் நடுரோட்டிலோ, முச்சந்தியிலோ நின்று அவர் சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக யார் மீது புகார் தெரிவித்து இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தனது கன்னத்தில் அறைந்தார் என்று வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவித்து பதிவு செய்திருக்கிறார்.
இதில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கக்கூடியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. எனவே அவர்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
ஆகவே பத்திரிகையாளர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா இருக்கக்கூடிய போயஸ் தோட்டத்திற்கு சென்று, இதுகுறித்த அவரது விளக்கங்களை கேட்டு, உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.