சென்னை:
மல்ஹாசன் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார் என்று அவரது நண்பர் கவுதமி கூறினார்.
கமல் தனது  ஆழ்வார்பேட்டை வீட்டில்,  இரவு நேரத்தில் மாடியிலிருந்து இறங்கும்போது படியில் வழுக்கி விழுந்து  காலில் காயம் ஏற்பட்டது.
kamal-goutha
அவரது குடும்பத்தினர்  உடனே அவரை  சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.   அங்கு கமல்ஹாசன் காலில் சிறுஅறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவமனையில் கமல்ஹாசனுடன்  அவரது மகள்களான  ஸ்ருதி, அக்ஷரா  மற்றும் நடிகை கவுதமி  மற்றும் கமல்  குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சந்தித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுதமி,
கமல்ஹாசன் நலமுடன் இருக்கிறார்.  அவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்  எனத் தெரிவித்தார்.