திசையன்விளை,

சிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் கொடுத்த வேலைக்கார பெண்ணை காணவில்லை என்று அவரது சகோதரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியின் குடும்பத்தினர்மீது அவரது வீட்டில் வேலை செய்த பெண்களான பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தனர். இந்த மனு புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அதைத்தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், அவர் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் பெற்றுவிட்டார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு,  பானுமதியும்,  ஜான்சிராணியும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கடிதம் எழுதியிருந்தனர்.

இதன் காரணமாக புதுக்கோட்டை போலீசார், வாபஸ் பெறும் மனு உண்மையானதுதான என்பதை  அறியும் வகையில் அந்த பெண்களிடம்  விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதையடுத்து அவர் இருவரையும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால், சம்மனை பெற அவர்கள் வசித்து வீட்டில் யாரும் இல்லை. அதனால்ர,  அந்த சம்மனை ஆனைகுடியில் உள்ள அவர்களது வீட்டில் போலீசார் ஒட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் புகார்தாரர்களில் ஒருவரான ஜான்சிராணி, திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். அப்போது, அவர் தனது சகோதரி பானுமதியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். மேலும், அவரை  அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும்,  அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என கூறியுள்ளார்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி. மீதான வழக்கை வாபஸ் பெற மனு கொடுத்த பானுமதி காணாமல்போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கூறும் போது,

சசிகலாபுஷ்பா மீது புகார் கொடுத்த  “பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.  அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆகலாம்.

அவர்கள் வர இயலாத நிலையில் போலீசார் நேரில் சென்று பானுமதி, ஜான்சிராணியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.