சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரை அரசு அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும், அவரது படத்தை பாடபுத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும்,  அவரது சமாதியை மெரினா கடற்கரையில் இருந்து அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறது மக்கள் அதிகாரம் அமைப்பு.

இந்த அமைப்பின் சார்பில் நேற்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ஜெயலலிதாவின் பெயர் அழிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானர்கள் பங்கேற்றனர். அப்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த அமைப்பினர், “குற்றவாளி ஜெலலிதாவின் பெயர் அரசு திட்டங்களில்  இருந்து நீக்கப்படவேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளனர்.