சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு கோர்ட்டு பதிவாளர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், 4 வார அவகாசம் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் இன்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது சிறை பயணம் உறுதியானது.

நேற்று இரவே சசிகலா பெங்களூர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் கைவிட்டுவிட்ட நிலையில் அவரது சிறைப்பயணம் உறுதியானது.

இன்று முற்பகல் 11.43 மணி அளவில் அவர் கார் மூலம் பெங்களூர் புறப்பட்டார்.. இன்று மாலை 4.30 மணி அளவில் அவர் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாகத்தில் சரணடைவார்  அடைவார் என எதிர்பார்க்கப்படு கிறது.

சிறைக்கும் போகும் வழியில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. சமாதிக்கு சென்று வணங்கிவிட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முதல்வரான ஜெயலலிதா  73நாள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து மரணமடைந்தார்.  அதுபோலவே சசிகலா ஜெ. இறந்த  73வது நாள் சிறை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…