சசிகலா பரோல் மனு: தமிழக காவல்துறை ஆய்வு!

பெங்களூரு,

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் மனு குறித்து தமிழக காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலமில்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை காரணம் காட்டி 15 நாள் பரோலுக்கு சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி கர்நாடக சிறைத்துறை சார்பில் தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, சசிகலா பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையில் தாக்கல் செய்த சில ஆவணங்கள் சென்னையில் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியானதுதானா என்பது குறித்தும்  சென்னை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தமிழக காவல்துறையில் இருந்து கர்நாடக சிறை துறைக்கு தகவல் தரப்படும் என்றும் அதன்பிறகே, சசிகலாவின் பரோல் குறித்து கர்நாடக சிறைத்துறை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
English Summary
Sasikala parole petition: Tamil Nadu police investigation