சென்னை: தமிழக முதலமைச்சர் விஜயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுகாவல் ஓரங்கட்டப்பட்ட, அவரது அண்ணனும்முன்னாள் மத்தியஅமைச்சரும், தி.மு.க-வின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி இன்று திடீரென முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்தினார். ஏற்கனவே  மு.க.அழகிரி குடும்பத்தினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கயல்விழி விஜயை சந்தித்துள்ளது விவாதப்பொருளாக மாறி உள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பேசிய கயல்விழி, தான் நீண்ட காலமாகவே முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து  வருவதாகவும், ஒரு ரசிகையாகவும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளதற்கும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதை பெரும் மகிழ்ச்சியாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கயல்விழி சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கயல்விழி கலந்துகொண்ட நிலையில், தற்போதுமீண்டும் சந்தித்துள்ளது  அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, அண்மைக் காலங்களில் தி.மு.க-வின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து சில விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]