அகமதாபாத்,

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகளின் வாட் வரியும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது, கலால் வரி குறைந்துள்ளதை தொடர்ந்து குஜராத் அரசு வாட் வரியை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில்  பெட்ரோல் மீதான வாட் வரி 34 சதவிகிதமாகவும்,  டீசல் மீதான வாட் வரி 25 சதவிகித மாகவும் உள்ளது.  ஒவ்வொரு மாநிலத்திலும் வாட் வரி விகிதம் வேறுபட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டு காணப்படுகிறது.

இந்நிலையில், எண்ணை நிறுவனங்கள்   பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து குஜராத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக குஜராத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறப்படுகிறது.