சென்னை:

சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிலாவின் ஏற்பாட்டில் அக் கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை சந்திக்க சசிகலா இப்போது சென்றுள்ளார்.

அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் காவல்துறையினர் தடுக்கிறார்கள். அவர்களுடன் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்துவருகிறார்கள்.

சசிகலாவுடன் செங்கோட்டையன்  எடப்பாடி பழனிச்சாமி உட்பட மூத்த நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர்.

சசிகலா வருகையினால், அந்த பகுதி சாலைகளை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி தவிக்கிறார்கள்.

“காலை முதல் காவல்துறையினர் சாலையை மறித்துவிட்டதால் மதியம் பள்ளிவிட்டு வந்த மாணவர்கள், குழந்தைகள் வீட்டுக்கு வர முடியாமல் தவித்தனர்” என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது