சென்னை,

திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி இன்று அவரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் முக்கிய நபர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே உலக மாநாடு சென்னையில் தொடங்கியது.  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது.

தென்னிந்தியாவைச் சேரந்த வி.ஐ.பி.க்கள் கலந்துகொள்ளும்ம் இந்தியா டுடே ஊடக மாநாடு சென்னையில் துவங்கியது. இந்த மாநாட்டில் தென் மாநிலங்களின் முதல்வர்கள்,  மத்திய அமைச்சர்கள், முக்கிய அரசியல் பிமுகர்கள், கலந்து கொள்கின்றனர். மேலும்  சினிமா பிரபலங்கள், நடிகர் கமலஹாசன், நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

முதல் நாள் மாநாட்டை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், எழுச்சி பெரும் தமிழகம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். கலைத்துறையில் தங்களது அனுபவங்களை நடிகர் கமலஹாசன், தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்று துவங்கிய இந்தியா டுடே ஊடக கருத்தரங்கில் முக்கிய விருந்தினராக அதிமுக பொது செயலாளர் சசிகலா கலந்து கொண்டார். பிறகு  ஊடக கருத்தரங்கை, சசிகலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். அப்போது சசிகலா கண்கலங்கினார்.

பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி, அதிமுக முன்னாள் மாநிலங்களவை தலைவர் மைத்திரேயன்,  பேசினார்.