ஜெய்ப்பூர்

ற்போதைய பாஜக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை, முதலீடுகளுக்கு சலுகைகள் ஆகியவை இருக்கக் கூடும் என சசிதரூர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து வரப்போகும் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சசி தரூர், “இது பாஜக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை என்பதால் அவர்கள் தேர்தலை முன்னிட்டு தங்கள் அறிக்கையில் பல சலுகைகளை அளிப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.    தற்போது நமது பொருளாதர நிலைமை மிகவும் மோசமடைந்து உள்ளதால் முதலீடுகளுக்கு சலுகைகள் தருவார்கள்.  அத்துடன் வரிச்சலுகைகளும் இருக்கும்.   விவசாயிகளைக் கவர பல நிதி உதவித் திட்டங்களையும் அளிக்கலாம்.    ஆனால் அதே நேரத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

பத்மாவத் திரைப்படத்துக்கு இவ்வளவு எதிர்பு வந்த போது எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.    வன்முறை வெடிக்கலாம் எனத் தெரிந்தும் அரசு எதுவும் செய்யாமல் இருந்தது மிகவும் கண்டிக்கத் தக்கது.   ஒரு குழுவை அடக்க இவர்களால் இயலவில்லை.   இது இந்த அரசின் கையாலாகத தனத்தை காட்டுகிறது.     அமைதியான ஒரு சூழலில் வாழ்வதை ஒரு அரசு உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்”  எனக் கூறி உள்ளார்.