சுல்தான் படத்தின் பணிகளை முடித்த கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதே தோற்றத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

கார்த்தியின் 22-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் ஒளிப்பதி செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, சுருங்கிய முகத்துடன் தோன்றியுள்ளார் கார்த்தி.