ராகுல் சங்க்ரீதியான் இயக்கத்தில் நானி நாயகனாக நடிக்கும் படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’.

இது மறு ஜென்மம் என்கிற கருவை வைத்து எழுதப்பட்டுள்ளது. சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி ஆகியோருடன் ராகுல் ரவீந்திரன், ஜுஷூ சென்குப்தா, முரளி சர்மா, அபினவ் கோமதம் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ள இந்தக் கதைக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடைசி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 10 ஏக்கரில் ரூ.6.5 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த கால கொல்கத்தா நகரம், துர்கை கோயில் ஆகியவைப் போல இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா தலைமையில் இது உருவாகியுள்ளது.