ஆர்யா நடிப்பில் 2021 ம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்யா தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

‘காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் ஆர்யா தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் பா ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், “சார்பாட்ட 2 Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட Round 2” என்று ஆர்யா பதிவிட்டுள்ளார்.

1970 ம் ஆண்டுகளில் வட சென்னையில் நடைபெற்ற குத்துசண்டை போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2 ம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.