சென்னை

சிறை தண்டனை பெற்றுள்ள சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தின் புகழ்பெற்ற உணவு விடுதியான சரவணபவன் நிறுவனர் ராஜகோபால். இவர் உணவு விடுதியில் மேலாளராக பணி புரியும் ஜீவஜோதியை மூன்றாவதாக மணமுடிக்க விரும்பிய ராஜகோபால் விருப்பத்துக்கு ஜீவஜோதி இணங்கவில்லை. அதை ஒட்டி ராஜகோபால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை மிரட்டியதாகவும் அவர் இந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காணாமல் போன சாந்தகுமார் கொடைக்கானல் மலையில் கொல்லப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்ததாக ராஜகோபால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. ராஜகோபாலுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த 10 வருட சிறை தண்டனை அரசு மேல் முறையிட்டின் பேரில் ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

ராஜகோபால் அளித்த மேல் முறையிட்டு மனு ரத்து செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. ஜூலை 7 ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் அவகாசம் கோரிய ராஜகோபால் மனு நிராகரிக்காட்டதால் அவர் நீதிமன்றத்தில் படுத்த படுக்கையாக சரண் அடைந்தார். அவர் உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி ராஜகோபால் சென்னை ஸ்டான்லி மருத்ஹ்டுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராஜகோபாலின் உறவினர்கள் தகவல் அறிந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.