சரஸ்வதி பூஜை: சென்னை – நெல்லை இடையே 'சுவிதா' சிறப்பு ரெயில்கள்!

Must read

sivitha-trains
சென்னை:
வராத்திரியின் இறுதி நாட்களான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 7-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (வண்டி எண்: 82601), மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
* அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 8-ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (82603), மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* திருச்சியில் இருந்து அக்டோபர் 8-ந் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06026), அதேநாளில் இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக் கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article