டில்லி,

சாரதா சிட்பண்ட்  பண மோசடி காரணமாக கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முகுல்ராய் இன்று பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார்.

சாரதா சிட்பண்ட்  பண மோசடியில் தொடர்பு இருப்பதாக மம்தா கட்சியை சேர்ந்த முகுல்ராய் எம்.பி.மீது  சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது.

இதையடுத்து, பாஜக தலைவர்கிடையே நெருக்கம் காட்டி சிபிஐ விசாரணையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

முகுல்ராய்  மம்தாவுக்கு அடுத்தப்படியாக கட்சியில் கோலோச்சியவர்.  அவரது பாஜக நெருக்கம் காரணமாக  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும், பாராளு மன்ற நிலைக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டுகள் அவரை நீக்கி மம்தா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி கொல்கத்தா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த முகுல் ராய், ’கனத்த மனதுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறி வித்தார். கட்சி தொடங்கிய ஆரம்பகாலத்தில் உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்ட முக்கிய நபர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகும் இந்த முடிவை மிகவும் கனத்த மனதுடன் அறிவிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த முகுல் ராய், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

அதையடுத்து அவர் பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கட்டது.

இந்நிலையில், இன்று  மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவருடன்  மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் இருந்தார்.  இணைப்புக்கு பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் ஆகியோரையும் முகுல் ராய் சந்தித்தார்.

இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.