இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா – சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்துக்கு இசையமைக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ‘பேய்ப்பசி’. யுவனின் உறவினர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் , நமிதா, அம்ரிதா ஐயர் உட்பட பலர்  ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குநர்   இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜாவும், சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இருவரும் இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் இசைக்கு பலமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஒரு பாடுவதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.