பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் இந்தப் படம் தொடங்கப்பட்டது. படத்தை தொடங்கி வைத்து பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,

நடிகர்-நந்திமுரி பாலகிருஷ்ணன் (என்.டி.ஆரின் மகன்) என்னிடம், ராமராவ் வாழ்க்கை வரலாறு குறித்து படம் தயாரிக்க இருப்பதாகவும், அதை தாங்கள் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், நான் எவ்வளவு  பிஸியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் சந்தோசமாக கலந்துகொள்வேன் என்று கூறினேன்.

மேலும் என்டிஆர் குறித்து பேசிய வெங்கையா நாயுடு, என்.டி.ஆர் தெலுங்கு மக்களின் நலனுக்காகவும், மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்றும் கூறினார்.